×

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ரூ.2.39 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி: அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்

 

மதுரை, நவ. 22: மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ரூ.2.39 கோடியிலான புதிய சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று துவக்கி வைத்தார். மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அல் அமீன் நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 10.90 கி.மீ நீள அளவில் 78 புதிய நகர தார் சாலைகள் மற்றும் வளர் நகர் பகுதியில் ரூ.99.10 இலட்சம் மதிப்பீட்டில் 4.81 கி.மீ 54 புதிய நகர தார் சாலைகள் மற்றும் 3.32 கி.மீ அளவில் 4 சாலை சீரமைப்புப் பணிகள் என மொத்தம் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் 15.71 கி.மீ அளவில் புதிய சாலைகள் அமைப்பதற்கும் 3.32 கி.மீ அளவில் சாலை சீரமைப்புப் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் பி.மூர்த்தி, இவற்றை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், எம்எல்ஏ வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் வாசுகிசசிகுமார், கவுன்சிலர்கள் தன்ராஜ், ராதிகாகௌரிசங்கர், பகுதி செயலாளர் சசிகுமார், மருது பாண்டியன், கௌரிசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ரூ.2.39 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி: அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Madurai East Assembly ,Minister ,P. Murthy ,Madurai ,B. Murthy ,Dinakaran ,
× RELATED பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு...