ராமநாதபுரம், நவ.22: ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி தங்கத்துரை முன்னிலை வகித்தார். இந்த ஆய்வின் போது, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, திருச்சூழி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் இயந்திரங்கள் உள்ளிட்ட மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குகள் என்னும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றிற்கான பாதுகாப்பு தன்மைகள் குறித்து பார்வையிட்டனர்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் வந்து செல்லும் பகுதி, வாக்கு எண்ணிக்கையின் போது பணி மேற்கொள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்லும் பகுதி என தனித்தனியே அமைக்க உள்ள வழித்தடங்களை பார்வையிட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. இந்த ஆய்வில் பரமக்குடி சப்-கலெக்டர் அப்துல் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.
