×

தமிழக பல்வகை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தை தெலங்கானா அறிவுசார் மையத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.மகேந்திரன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் பயிற்சி மையத்தை, தெலங்கானாவுக்கு மாற்றும் முடிவை கைவிடுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு மையங்களையும் இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அவ்வாறு இணைத்தால் மாற்றுத் திறனுடையவர்கள் அலைச்சலுக்கு உள்ளாவார்கள் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை. இரு அமைப்புகளுக்கும் தனித்தனி செயற்குழு இருப்பதற்கு பதிலாக ஒரே குழுவாக கொண்டு வருவதற்கான திட்டம் மட்டுமே பரிசீலனையில் உள்ளது. இரு மையங்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்படது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இரு மையங்களும் இணைக்கப்படும் என்ற மனுதாரரின் அச்சம் அடிப்படையற்றது என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்….

The post தமிழக பல்வகை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தை தெலங்கானா அறிவுசார் மையத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Multidisciplinary Displacement Development Centre ,Telangana Intellectual Centre ,Union Government ,Chennai ,Chennai High Court ,Mahendran ,National for the Development of Displacement ,TN Multidisciplinary Disability Development Centre ,Court ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...