×

அம்மன் கோயில் பூட்டு உடைப்பால் பரபரப்பு

 

திருவில்லிபுத்தூர், நவ.22: திருவில்லிபுத்தூரில் கோயில் பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவில்லிபுத்தூர் ராஜபாளையம் மெயின் சாலை பகுதியில் காளையார்குறிச்சி தெருவில் அமைச்சியார் அம்மன் கோவில் உள்ளது. நேற்று கோவிலின் பூட்டுகள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.

இது குறித்து தெரு தலைவர் ராதாகிருஷ்ணன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகார் அடிப்படையில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தாலும் திருட்டு ஏதும் நடைபெறவில்லை. கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அம்மன் கோயில் பூட்டு உடைப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Tiruvilliputhur ,Thiruvilliputhur Rajapalayam ,
× RELATED திருவில்லிபுத்தூரில் கேந்தி பூக்கள்...