×

வேப்பேரியில் உள்ள தங்கும் விடுதியில் நீதிமன்ற பெண் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை: வேலைக்கு சேர்ந்த 10 நாளில் பரிதாபம்

சென்னை: தஞ்சாவூரை சேர்ந்தவர் இவாஞ்சலின் சிந்தியா (24). இவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, எழும்பூரில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். வேப்பேரியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி, வேலைக்கு சென்று வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று முன்தினம் பணிக்கு சென்ற இவாஞ்சலின், இரவு விடுதிக்கு திரும்பினார். உடன் தங்கி இருந்த 2 பெண்கள் இரவு பணி முடிந்து வந்து பார்த்த போது, மின் விசிறியில் இவாஞ்சலின் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த வேப்பேரி போலீசார், இவாஞ்சலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவாஞ்சலினுக்கு, அவரது பெற்றோர் அரசு பணி கிடைத்ததும், திருமணம் செய்து வைக்க வரன் பார்த்துள்ளனர். பெற்றோர் பார்த்த வரனை இவாஞ்சலினுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும், வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேப்பேரியில் உள்ள தங்கும் விடுதியில் நீதிமன்ற பெண் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை: வேலைக்கு சேர்ந்த 10 நாளில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Vepperi ,Chennai ,Evangeline Scindia ,Thanjavur ,City Civil ,Egmore ,
× RELATED பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!!