×

போதைப்பொருள் விற்க உடந்தை 2 உதவி ஆய்வாளர்கள், 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: ஆவடி கமிஷனர் அதிரடி

சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் அம்பத்தூர், ஆவடி, செவ்வாய்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ், எண்ணூர், மணலி, போரூர், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் குட்கா, கூல் லிப் போன்ற புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, நேற்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், சுமார் 146 கடைகளில் சோதனை செய்யப்பட்டது. 23 கடைகளில் இருந்த சுமார் 113 கிலோ 850 கிராம் எடை புகையிலை மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு மொத்தமாக 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் போன்ற புகையிலை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சங்கரின் இந்த நடவடிக்கையால் போதைப்பொருள் நடமாட்டம் குறைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

The post போதைப்பொருள் விற்க உடந்தை 2 உதவி ஆய்வாளர்கள், 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: ஆவடி கமிஷனர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Avadi ,Chennai ,Aavadi ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை...