×

திருவண்ணாமலையில் பாமக இன்று ஆர்ப்பாட்டம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து திருவண்ணாமலையில் இன்று பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் 2வது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது.

சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் முப்போகம் விளையும் பூமி ஆகும். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் பாமக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரத்தை அடுத்த மேல்மா கூட்டு சாலையில் இன்று (22ம் தேதி) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

 

The post திருவண்ணாமலையில் பாமக இன்று ஆர்ப்பாட்டம்: அன்புமணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhamaka ,Tiruvannamalai ,Chennai ,Akkatsi ,Anbumani ,Phamaka ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி குறித்த...