×

இருதரப்பு திறன், தொழில்நுட்பம் பரிமாற்றம் இந்திய-அமெரிக்க ராணுவ கூட்டுப்பயிற்சி: மேகாலயாவில் நேற்று தொடங்கியது

கவுகாத்தி: இந்திய-அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவுகளின் 20 நாள் கூட்டுப்பயிற்சி நேற்று மேகாலயாவில் தொடங்கியது. கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்திய-அமெரிக்க படைகளுக்கிடையே ‘வஜ்ர பிரகார்’ என்ற சிறப்பு கூட்டுப்பயிற்சி இரு நாடுகளிலும் நடந்து வருகிறது. இதன் மூலம் இரு தரப்பு ராணுவ செயல் திறனை அதிகரிப்பது, போர் தந்திரங்கள் பறிமாறிக்கொள்வது ஆகியவை மேற்கொள்ளப்படும். நடப்பு ஆண்டு வஜ்ர பிரகார் கூட்டுப்பயிற்சி மேகாலயாவில் உள்ள உம்ரோய் ராணுவ முகாமில் நேற்று தொடங்கி டிசம்பர் 11ம் தேதி வரை 20 நாட்கள் நடக்கிறது.

சிறப்பு பயிற்சிக் காலத்தில் அதிரடி திட்டம் நிறைவேற்றம், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, மலைப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய கூட்டுப்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், நீர்நிலை வழியே ஊடுருவல், தொலைதூர துல்லிய தாக்குதல், வான்வழி தாக்குதல் ஆகியவற்றில் இரு தரப்பு அனுபவங்களும், தொழில்நுட்பங்களும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இருதரப்பு திறன், தொழில்நுட்பம் பரிமாற்றம் இந்திய-அமெரிக்க ராணுவ கூட்டுப்பயிற்சி: மேகாலயாவில் நேற்று தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : India ,US ,Meghalaya ,Guwahati ,Indo-US Army ,Indo ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...