×

ஒன்றிய, நகர, பேரூர் திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் டி.எம்.சுகுமாரன், தா.மோதிலால், ம.புவனேஷ்குமார், மிஸ்டர் தமிழ்நாடு டி.ஆர்.திலீபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர், சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டு பணிகள் குறித்தும், மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும், நீட் விலக்கு கையொப்ப பணிகளை துரிதப்படுத்தல் குறித்தும் பல்வேறு ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, திருத்தணி எம்.பூபதி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பிரபு கஜேந்திரன், அப்துல் மாலிக், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், மிதுன் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.சிட்டிபாபு, வி.கிஷோர், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் வினோத்குமார், ரவிச்சந்திரன், மகாலிங்கம், ரமேஷ், ஆர்த்தி ரவி, கிருஷ்ணன், சண்முகம், பழனி, வழக்கறிஞர் சீனிவாசன், சந்திரன், ஜோதிக்குமார், பாபு, மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய, நகர, பேரூர் திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Union ,City ,Perur ,DMK ,Thiruvallur ,Thiruvallur West District DMK Youth Team ,Nagar ,Perur DMK ,Dinakaran ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு