×

மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தூத்துக்குடி: மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மீனவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு, கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் தூத்துக்குடி ஸ்நோ ஹாலில் மீனவர் தின விழா நடபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மீனவ சமுதாய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும், மீனவ சமுதாய தலைவர்களின் சேவைகளையும் பாராட்டி விருது வழங்கினார்.

பின்னர் உரையாற்றிய அவர்; 2 மாதத்திற்கு முன்பு மீனவர்களிடம் அவர்கள் பிரச்னை குறித்து கேட்டறிந்தேன். மீனவர்களின் குறையை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பித்தேன். நான் மீனவர்களுக்கு நம்பிக்கை தெரிவிக்கின்றேன். அவர்களின் பிரச்னைகள் அனைத்தையும் நான் முடித்துக் கொடுப்பேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீனவர்கள் முக்கிய பங்கு வகுகின்றனர். கடலோர காவல்படையில் மீனவ இளைஞர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படையில் பெண்களும் இடம்பெற வேண்டும். கடலோர காவல்படையில் உள்ள சிலர் நீச்சல் கூட அடிக்க முடியாத நபர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் செல்லும்போது ஆபத்து ஏற்பட்டால் எப்படி நாம் பிழைக்க முடியும்?. பாரதம் 20 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் கடல் வளம் நிறைந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டுள்ளது. நமது மீனவர் சமூகத்தின் சாத்தியக்கூறுகள், அவற்றை உகந்த வகையில் பயன்படுத்தும் ஆற்றல் பெற்ற நமது மீனவ சமூகம், சுயசார்பு பாரதத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வர வேண்டும். நாட்டை பாதுகாக்க எத்தனை படை இருந்தாலும் கடலை பாதுகாக்க மீனவர்களால் மட்டும்தான் முடியும்; மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள் இவ்வாறு கூறினார்.

The post மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor R. N. Ravi ,Thoothukudi ,Governor R. N. Ravi Pachhu ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்