சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் ஓரளவு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ரோப்கார் அமைக்கும் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்றிரவு திடீரென ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார். ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கோயில் உதவி ஆணையர் ஜெயா, அரக்கோணம் ஆய்வர் பிரியா, கண்காணிப்பாளர் சுேரஷ், போலீஸ் எஸ்ஐ பசலைராஜ், நகராட்சி துணைத்தலைவர் பழனி, கவுன்சிலர்கள் அசோகன், சிவானந்தம், அருண் ஆதி, லோகேஸ்வரி, மோகனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி தகவல் appeared first on Dinakaran.