×

அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு: பாஜக மாநில ஓபிசி அணியின் துணை தலைவர் அசோக்குமார் அதிமுகவில் இணைந்தார்..!!

சென்னை: பாஜக ஓபிசி அணி மாநில துணை தலைவர் அசோக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் அசோக்குமார் இணைந்தார்.

அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு-பாஜக நிர்வாகி விலகல்

மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டு அசோக்குமார் பணிகளை செய்து வந்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என தொகுதி முழுவதும் சென்று ஏராளமான நலத் திட்ட உதவிகளை அசோக்குமார் செய்து வந்தார். ஈரோடு தொகுதியை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கோடிக்கணக்கில் ஆற்றல் அசோக்குமார் செலவழித்து வந்தார். ஆற்றல் என்ற அறக்கட்டளை மூலம் ஈரோடு பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

கட்சி மாறிய பாஜக எம்.எல்.ஏ.வின் மருமகன்:

பாஜகவில் இருந்து விலகிய அசோக்குமார், மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகன் ஆவார்.

The post அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு: பாஜக மாநில ஓபிசி அணியின் துணை தலைவர் அசோக்குமார் அதிமுகவில் இணைந்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP state ,OBC ,vice president ,Ashokumar ,AIADMK ,CHENNAI ,BJP OBC ,vice-president ,General ,Secretary… ,BJP State OBC Team ,Dinakaran ,
× RELATED மிகப்பெரிய ஆட்கள் பாஜகவுக்கு...