×

சென்னை கொத்தவால்சாவடியில் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசியவருக்கு 2 நாள் போலீஸ் காவல்; ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் பெட்ரோல் குண்டு வீசியவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் 2 நாள் அனுமதி வழங்கியது. சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் கடந்த வாரத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ளது வீரபத்திர சுவாமி கோவில். அதே பகுதியை சேர்ந்த 38 வயதான முரளி கிருஷ்ணன் என்பவர் பெட்ரோல் குண்டோடு கோயில் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

முரளி கிருஷ்ணன் கையில் பெட்ரோல் குண்டு இருப்பதை அறிந்து கோவில் உள்ளே இருந்த பூசாரி அலறி அடித்து வெளியே ஓடி வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கோயில் மீது முரளி கிருஷ்ணா பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். கோவிலுக்கு வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பெட்ரோல் குண்டை வீசிய முரளி கிருஷ்ணனை பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாக இந்த கடவுளே வழிபட்டு வருவதாகவும், பிரார்த்தனை செய்து வருவதாகவும் ஆனால், கடவுள் எனக்கு திருப்பி ஏதும் தரவில்லை. அந்த கோபத்தில் குண்டு வீசினேன் என மது போதையில் கூறியுள்ளார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக முதலில் புகார் எழுந்த நிலையில், மதுபோதையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனிடையே முரளி கிருஷ்ணாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு ஒன்று கொத்தவால்சாவடி போலீசார் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முரளி கிருஷ்ணாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி வழங்க முடியாது எனவும் தேவைப்பட்டால் 2 நாட்கள் அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் புழல் சிறையில் உள்ள முரளி கிருஷ்ணாவை பலத்த பாதுகாப்புடன் கொத்தவால்சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முரளி கிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னை கொத்தவால்சாவடியில் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசியவருக்கு 2 நாள் போலீஸ் காவல்; ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kothawalchavadi, Chennai ,George Town Court ,Chennai ,Kotdhawalsavadi, Chennai ,Georgetown court ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...