×

மதுரை ஜிஹெச் இருதயவியல் துறை மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை, நவ. 21: மதுரை அரசு மருத்துவமனை இருதயவியல் மருத்துவ துறை சார்பில் முதுநிலை மாணவர்களுக்கான தொடர் கல்வி பயிற்சி வகுப்புகள் முகாம் மருத்துவமனை அரங்கில் நடந்தது. பயிற்சி முகாமில், நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க மருத்துவர்கள் பயன்படுத்தும் தகவல்கள், திறன்கள் மற்றும் தொழில்முறை அனுபவத்தை பராமரிக்க, மேம்படுத்த, வளர்க்க போன்ற பல்வேறு கல்வி நடவடிக்கைகள் குறித்து பயிற்சி நடந்தது. மதுரை அரசு மருத்துவமனை இருதயவியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

துணை முதல்வர் தனலட்சுமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் கணேசன், துணை கண்காணிப்பாளர் தர்மராஜ், இருதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் செல்வராணி, ஆர்எம்ஓ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர்கள் ஏராளமானோர் காணொளி காட்சி மூலம் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். இருதயவியல் நிபுணர்கள், தங்களது மருத்துவ துறை அனுபவங்களை செயல்முறை பயிற்சி மூலம் பகிர்ந்து கொண்டனர். மாணவர்களுக்கு கருத்தரங்கம், வினாடி- வினா போட்டி நடந்தது.

The post மதுரை ஜிஹெச் இருதயவியல் துறை மாணவர்களுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,GH ,Madurai Government Hospital Cardiology Department ,Madurai GH Cardiology Department ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...