×

மது போதையில் தகராறு நண்பரின் கழுத்தை பிளேடால் அறுத்தவருக்கு 5 ஆண்டு சிறை: பெரியகுளம் நீதிமன்றம் தீர்ப்பு

 

பெரியகுளம், நவ. 21:பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (27). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன்(27). இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி இருவரும் பட்டாளம்மன் கோயில் பின்புறம் உள்ள மயான கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், நண்பர் என்றும் நினைக்காமல் சிவக்குமாரின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். மேலும் அவரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சிவக்குமார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது சம்பந்தமாக தென்கரை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை பெரியகுளம் சப் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கற்பூரசுந்தர் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன் குற்றவாளி லட்சுமணனுக்கு 5 ஆண்டுசிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

The post மது போதையில் தகராறு நண்பரின் கழுத்தை பிளேடால் அறுத்தவருக்கு 5 ஆண்டு சிறை: பெரியகுளம் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Sivakumar ,Periyakulam Tenkarai ,Lakshmanan ,Periyakulam court ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி