×

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பாலமுருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

ஏழாயிரம்பண்ணை, நவ.21: துலுக்கன்குறிச்சி வாழைமர பாலமுருகன் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. வெம்பக்கோட்டை அருகே துலுக்கன்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு வாழைமர பாலமுருகன் திருக் கோவிலில் கார்த்திகை மாத சோமவார விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு பாலமுருகனுக்கு மகா தீபாராதனையும் நடந்தது.

இந்த கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு யாகமும், 108 சங்கு பூஜையும் நேற்று மாலை நடந்தது. இதைத்தொடர்ந்து 108 சங்குகளில் பூஜை செய்யப்பட்ட புனிதநீரை கொண்டு முருகனுக்கு அபிஷேகமும், வண்ணமலர்களால் அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பாலமுருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : 108 Sankabishekam ,Balamurugan Temple ,Karthighai Somawara ,Sevilampanai ,Sangabhishek ,Monumawaran ,Dulukkankurichi Banana Tree Balamurugan Temple ,Tulukkankurichi ,Wembakot ,108 Sangabishekam ,Karthigai Somawari ,
× RELATED ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில்...