×

கொலை வழக்கில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்

 

பெரம்பலூர்,நவ.21: அரும்பாவூர் அருகே நடந்த கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை பிடித்து நீதிமன்ற பிடிவாரண்டை நிறைவேற்றினர் போலீசார். பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கின் குற்றவாளியான ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ்(33) என்பவர் நீதிமன்ற ஜாமீனில் வெளி வந்து, பின் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்து வந்தார். பிரகாஷ் மீது கடந்த 2019ம் ஆண்டு பெரம்பலூர் நீதி மன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் டிஎஸ்பி பழனிச்சாமி வழிகாட்டுதலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு பிரகாஷை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் எஸ்எஸ்ஐ தேவேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த குற்றவாளி பிரகாஷை கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுக்கா, மெட்டுவாவி என்ற கிராமத்தில் உறவினருக்குக்கூட தெரியாமல் பதுங்கி இருந்ததைத் தெரிந்து கொண்டனர். நேற்று அங்கு சென்று பிரகாஷை கைதுசெய்து, அரும்பாவூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வழக்குபதிவு செய்தனர். பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து, நீதிமன்றம் பிறப்பித்திருந்த வாரண்டு உத்தரவை நிறேவேற்றியுள்ளனர்.

 

The post கொலை வழக்கில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Arumbavoor ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை