×

விவசாயிகள் கவலை குறைதீர் கூட்டத்தில் புகார் சேலம் திமுக இளைஞரணி மாநாடு விழிப்புணர்வு பேரணி குளித்தலையில் உற்சாக வரவேற்பு

 

குளித்தலை நவ. 21: சேலம் திமுக இளைஞரணி மாநாட்டு விழிப்புண்ர்வு பேரணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் திமுக இளைஞரணி மாநாட்டு விழிப்புணர்வு பேரணி குளித்தலை வந்தது. விழிப்புணர்வு பேரணிக்கு குளித்தலை தொகுதிக்குட்பட்ட குளித்தலை நகரம், குளித்தலை கிழக்கு ஒன்றியம் மேற்கு ஒன்றியம், மருதூர் நங்கவரம் பேரூராட்சி சார்பில் குளித்தலை பஸ் நிலையத்தில் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், மாநில வர்த்தகரணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, நகர்மன்ற தலைவர் சகுந்தலா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றியச்செயலாளர் சந்திரன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், பேரூர் கழக செயலாளர்கள் ரவீந்திரன் முத்து என்கிற சுப்பிரமணியன், மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் இளைஞரணி அமைப்பாளர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் கவலை குறைதீர் கூட்டத்தில் புகார் சேலம் திமுக இளைஞரணி மாநாடு விழிப்புணர்வு பேரணி குளித்தலையில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Salem DMK youth conference ,Khuthalai ,Salem DMK Youth Conference Awareness Rally ,Salem DMK… ,Dinakaran ,
× RELATED குளித்தலையில் முதுகு தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம்