×

வள்ளியூர் சூட்டுப்பொத்தை முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையில் நாளை கிரிவல தேரோட்ட வைபவம்

வள்ளியூர்,நவ.21: வள்ளியூர் சூட்டுப்பொத்தை  முத்துகிருஷ்ண சுவாமிகள் 110வது குருபூஜையில் கிரிவல தேரோட்ட வைபவம் நாளை (22ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. நெல்லை மாவட்டம், வள்ளியூர் சூட்டுப்பொத்தையில் ஆண்டுதோறும்  முத்துகிருஷ்ண சுவாமிகள் குருபூஜை 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான 110வது குருபூஜை கடந்த 18ம் தேதி வனவிநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. இதையொட்டி முத்துக்கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன. குருபூஜை நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இசை, குரலிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிரிவல தேரோட்ட வைபவம் நாளை (22ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது.

இதில் திரளாகப் பங்கேற்கும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்க்கின்றனர். தேர் நிலையத்தை வந்தடைந்ததும் சிறப்பு அன்னதானம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 23ம் தேதி குருபூஜையும், 26ம் தேதி மாலை 5 மணிக்கு மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் (27ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கிரிவலம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு குறு ஜெயந்தி ஆராதனை, திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும்  முத்து கிருஷ்ண சுவாமி கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post வள்ளியூர் சூட்டுப்பொத்தை முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையில் நாளை கிரிவல தேரோட்ட வைபவம் appeared first on Dinakaran.

Tags : Kriwala Therota ,Vaipavam ,Valliyur Sutuppothai ,Swami ,Gurupuja ,Valliyur ,Kriwala Therota Vipavam ,Valliyur Sutuppotha ,Muthukrishna ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்