×

தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

நெல்லை,நவ.21: நெல்லை மாவட்டம், நாங்குநேரி சரகம் ராதாபுரம் சமூகரெங்கபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(43). இவரை அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்தவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து நாங்குநேரி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி நாங்குநேரி போலீசார் முருகனை பல இடங்களில் தேடிவந்தனர். இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post தலைமறைவாக இருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Murugan ,Amman Koil Street, Nanguneri Charakam Radhapuram, Samadharengapuram, Nellai district ,Dinakaran ,
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 1800...