×

இன்று சிறப்பு பட்டா முகாம்

 

தர்மபுரி, நவ.21: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் இன்று (21ம் தேதி) சிறப்பு பட்டா முகாம் நடக்கிறது. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு பட்டா முகாம் இன்று (21ம் தேதி) நடக்கிறது.

இம்முகாமில், நில உடமை தொடர்பான அனைத்து பிரச்னைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு வழங்கப்படவுள்ளது. இதில் யூடிஆர் திருத்தம், பட்டா மேல்முறையீடு, பட்டாவில் உள்ள பிழைத்திருத்தம், பட்டாவில் உள்ள பெயர் திருத்தம், கணினி சிட்டாவில் ஏற்பட்டுள்ள பிழைத்திருத்தம், இலவச வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டி இருப்பின், உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிவசுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம்

The post இன்று சிறப்பு பட்டா முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Government Arts College ,band ,Dinakaran ,
× RELATED தொப்பூர் கணவாயில் லாரி பிரேக்...