×

நாகர்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், நவ. 21: தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலைகளை கண்டித்தும், படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வடசேரி அண்ணா சிலை அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜன், மாவட்ட பொருளாளர் பேரின்பதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஐசக், மூர்த்தி, செல்வம், அழகை கண்ணன், சுமன் பாண்டியன், அச்சுதன், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகர செயலாளர் இந்திரா குமார் நன்றி கூறினார்.

The post நாகர்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu People's Progress Association ,Nagercoil ,Tamil Nadu People's Progress ,
× RELATED நேற்று த.மா.கா.. இன்று தமிழக மக்கள்...