×

இலக்கு மாற்றமில்லாதது சமத்துவ சமுதாயம் நோக்கி உழைப்போம் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: கொள்கைக் களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம். ஆனால் நமது இலக்கு மாற்றமில்லாதது. அதுதான் சமத்துவச் சமுதாயம், அதை நோக்கி உழைப்போம் என்று நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்றைய டிவிட்டர் பதிவு: இன்று, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும் பயணத்தின் முதலடி எடுத்து வைக்கப்பட்ட நாள். கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள். நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள். கொள்கைக் களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம். ஆனால் நமது இலக்கு மாற்றமில்லாதது. அது தான் சமத்துவச் சமுதாயம். அதை நோக்கி உழைப்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post இலக்கு மாற்றமில்லாதது சமத்துவ சமுதாயம் நோக்கி உழைப்போம் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,David. ,CHENNAI ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...