×

சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் மீட்புப்பணியில் முன்னேற்றம்: அதிகாரிகள் தகவல்

டேராடூன்: சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா பகுதியில் மலையை குடைந்து 4.5 கிமீ தொலைவுக்கு சுரங்க சாலை அமைக்கும் பணி நடந்தது. கடந்த 12ம் தேதி திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி 9வது நாளாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி நேற்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணி குறித்த முன்னேற்றங்களை கேட்டறிந்தார்.

மீட்புப் பணியில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்க இடிபாடுகளில் நேற்று 6 அங்குல அகல குழாய் அமைக்கப்பட்டது. இதற்கு முன் இங்கு 4 அங்குல அகல குழாய் இருந்தது. இதன் வழியாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு உலர் பழங்கள், மருந்து, ஆக்சிஸன் போன்றவை அனுப்பப்பட்டன. தற்போது 6 அங்குல அகல குழாய் அமைக்கப்பட்டிருப்பதால் ரொட்டி, சப்ஜி போன்ற உணவுகளையும் அனுப்ப முடியும் என்றும்,தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

The post சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் மீட்புப்பணியில் முன்னேற்றம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dehradun ,Chardam ,Silkyara ,Uttarakhand, Uttarakhand ,Dinakaran ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...