×

அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி ₹19 கோடி டெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை:   முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் ேவர்கிளம்பி, கிள்ளியூர் வல்வச்சகோட்டம், பலுகல், கொடநல்லூர், ஏழுதேசம், திருவிதாங்கோடு, கல்லுக்கூட்டம், ஆரல்வாய்மொழி, கடையல், முளகுமூடு ஆகிய பேரூராட்சிகளில் ரூ.19.52 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு அதிமுக ஆட்சியின்போது கடந்த ஜன.13ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பணிகளை ஒதுக்குவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. வெளிப்படைத்தன்மை இல்லை. கண் துடைப்பாகவே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.2 கோடிக்கு அதிகமான பணிகளுக்கான டெண்டருக்கு 30 நாள் அவகாசமும், ரூ.2 கோடிக்கு குறைவான பணிகளுக்கு 15 நாள் அவகாசமும் இருக்க வேண்டும். இதுபோன்ற எந்தவித விதிகளையும் பின்பற்றவில்லை. 6 நாள் அவகாசம் மட்டுமே இருந்தது. டெண்டர் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பாசத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல் புகழ்காந்தி ஆஜராகி, ‘‘முந்தைய அதிமுக ஆட்சியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசரகதியில் விதிகளை மீறி டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், அரசுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. டெண்டர் விதிகள் பின்பற்றப்படவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் மனுதாரர் கோரிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் நகராட்சி நிர்வாக முதன்ைம செயலர் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்….

The post அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி ₹19 கோடி டெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Madurai ,former ,Minister ,Sureshrajan ,Igort Madurai ,Kannyakumari District ,Yvarkilumbi ,Killyur Valvachakotam ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...