×

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 14 மாதங்களுக்கு பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்பான குட்கா வழக்கில் சிபிஐ விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான விசாரணையை தொடங்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கல் மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி சிபிஐ அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான அடுத்த நடவடிக்கைக்கான அனுமதியை ஆளுநர் கடந்த 13-ம் தேதி வழங்கினார்.

அதே போல் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணை மேற்கொள்வதற்கு தமிழக அரசு சார்பாக அனுமதி கோரபட்டது. அந்த வழக்கிலும் அனுமதி வழங்கபட்டுள்ளதாக ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. இதனைஅடுத்து வழக்கின் விசாரணையானது அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும்.

அதே போல் ஆயுள் தண்டனை கைதிகள் 580 பேரை முன்விடுதலை செய்ய கோரிய மசோதாவில் 365 முன் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்து 165 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கபட்டுள்ளது.

The post அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : R. N. Ravi ,Chennai ,P. V. Ramana ,C. Vijayabaskar ,M. R. Vijayabaskar ,R. N. Ravi Approval ,Dinakaran ,
× RELATED ‘கெட்அவுட் ரவி’ ஹேஷ்டேக் எக்ஸ்...