×

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.பி. கோல்டு, பார்ஸ்வி ஆகிய நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சவுகார்பேட்டைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோகன்லால் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு அங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

விடிய விடிய நடைபெற்ற அதிரடி சோதனையில் ரூ.500கோடி வருமானம் கணக்கில் காட்டப்படாதது தெரியவந்தது. வங்கிகளில் வைக்கப்படும் நகைகளை வாங்கி அதிலிருந்து மாறுதலாக நகைகளை மாற்றி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வரும் இடத்திலிருக்கும் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் மோகன்லால் ஜுவல்லர்ஸில் 4 வாகனங்களில் வந்த அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாது வீரப்பன் தெருவில் உள்ள டி.பி. கோல்டு, பார்ஸ்வி ஆகிய நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Choukarpet, Chennai ,CHENNAI ,D.P. Gold ,Parsvi ,Enforcement Department ,Choukarpettai, Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...