×

5 மாநில தேர்தல் நடவடிக்கை: ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.. இந்திய தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: 5 மாநில தேர்தல் நடவடிக்கையாக ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் வாக்குப் பதிவுகள் அனைத்தும் நவம்பர் 30-ல் முடிவடைந்து டிசம்பர் 3-ல் வாக்குகள் எண்ணப்படும். தற்போதைய நிலையில் 5 மாநிலங்களில் ராஜஸ்தானில் மட்டும்தான் பாஜக ஆட்சிக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதாவது, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 20ம் தேதி வரை தேர்தல் விதிகள் உட்பட்டிருக்கும் நிலையில், அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மதிப்பீடு குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. இதுவரை 5 மாநிலங்களை சேர்ந்து ரூ.1760 கோடி மதிப்பிலான, பணம், மதுபானம், தங்கம், வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 மடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு 239 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை பணம், பொருட்கள் என 76.9 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 323.7 கோடியும், மிசோரம் மாநிலத்தில் 49.6 கோடி ரூபாயும், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 650.7 கோடியும், தெலுங்கானா மாநிலத்தில் 659.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் ரொக்க பணம் மட்டுமே 225.23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 103. 74 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post 5 மாநில தேர்தல் நடவடிக்கை: ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.. இந்திய தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Delhi ,Indian Election Commission ,Dinakaran ,
× RELATED உதயசூரியன் சின்னத்தில்...