×

உலக கோப்பை விளையாட்டை காண முன்னாள் கேப்டன் கபில்தேவை அழைக்காததை ஏற்க முடியாது: காங்கிரஸ் மூத்த தலைவர் கண்டனம்


புதுடெல்லி: உலக கோப்பை விளையாட்டை காண்பதற்கு கபில்தேவை அழைக்காததை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த போட்டியை காண்பதற்காக இந்திய பிரபலங்கள் பலர் அழைக்கப்பட்டனர். ஆனால் கடந்த 1983 உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவை, போட்டியை காண்பதற்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்வதற்கான அழைப்பாளர்கள் பட்டியலில், கபில் தேவின் பெயர் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுமையான செயலாகும்.

பேடியைப் போலவே, கபில் தேவும் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதில் பெயர் பெற்றவர் ஆவார்’ என்றார். முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் புகார் கூறிய மல்யுத்த வீரர் வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்திற்கு கபில் தேவ் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில், ‘எனக்கு அழைப்பு ஏதும் இல்லை. அதனால் நான் போகவில்லை. இதுவொரு சாதாரண விஷயம் தான். எனது தலைமையிலான 83 பேர் கொண்ட குழுவையும் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் நிறைய வேலைகள் இருக்கும் என்பதால், அவர்கள் எங்களை மறந்திருப்பார்கள்’ என்றார்.

The post உலக கோப்பை விளையாட்டை காண முன்னாள் கேப்டன் கபில்தேவை அழைக்காததை ஏற்க முடியாது: காங்கிரஸ் மூத்த தலைவர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kapil Dev ,World Cup ,Congress ,New Delhi ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மாவுக்கு தனது வரம்புகள்...