×

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!

சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

மேலும், ஏற்கெனவே அறிவித்தப்படி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை (நவ.21) மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

The post சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : District Secretaries ,Adimuga Head Office ,Chennai ,Adimuka District Secretaries ,Secretary General ,Edapadi Palanisami ,Adimuka ,Head Office ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...