×

பச்சை நிற பால் வரும் 25ம் தேதி முதல் சில்லரை விநியோகம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல்

சென்னை: பச்சை நிற பால் வரும் 25ம் தேதி முதல் சில்லரை விநியோகம் நிறுத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் 14.75 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்யப்படுகிறது.

இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், சமன் படுத்தப்பட்ட பால், அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப்படுகிறது. இதனிடையே பச்சை நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4.5 கொழுப்பு சத்தள்ள பாலை லிட்டர் ரூ.44க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருவதாக தகவல் உள்ளது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்து விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விறப்னையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 25ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். அட்டைதாரர்கள் டிசம்பர் 15ம் தேதி வரை பச்சை நிற பால் வழங்கப்படும் என ஆவின் நிறுவன அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

The post பச்சை நிற பால் வரும் 25ம் தேதி முதல் சில்லரை விநியோகம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Awin ,Chennai ,Avin ,Dinakaran ,
× RELATED கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர்...