×

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் என்ன பேசினார் என்றால் ” லியோ படத்தில் த்ரிஷாவுடன் என்று நடிக்கிறோம் என்றவுடன் ரொம்பவே சந்தோஷபட்டேன். கண்டிப்பா பேட் ரூம் சீன் எல்லாம் இருக்கும் நடித்துவிடலாம் ” என்பது போல சற்று கொச்சையாக பேசி இருந்தார். அவர் பேசியதற்கு நடிகை த்ரிஷா ” சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய வீடியோ பார்த்தேன்.

அவர் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுப்பு மற்றும் மோசமான அவர் எண்ணத்தை காட்டுகிறது. அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் திரையில் நடித்ததில்லை என்பதற்கு திரைத்துறையினருக்கு நன்றி கூறுகிறேன். இனிமேல் அவருடன் நான் நடிக்க மாட்டேன்” என கூறினார். த்ரிஷா இப்படி பதிவு போட்டவுடன் திரைபிரபலன்கள் பலரும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trisha ,National Women's Commission ,DGB ,Mansour Ali Khan ,Chennai ,DGP ,
× RELATED ஜனாதிபதி வழங்கிய கீர்த்தி சக்ரா...