×

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அரச மரம், வேப்ப மரத்திற்கு திருக்கல்யாணம்: வேடசந்தூர் அருகே விநோதம்

 

வேடசந்தூர், நவ. 20: வேடசந்தூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அரச மரம், வேப்ப மரத்திற்கு திருக்கல்யாணம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி கிராமத்தில் அரச மரத்துடன் வேம்பு மரம் சேர்ந்து உள்ளது. சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த இரு மரங்களையும் அப்பகுதி மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு முதல் முறையாக நேற்று சிவன் – பார்வதி திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து அரசு-வேம்புக்கு திருமணமும் நடைபெற்றது.

இதனையொட்டி அரசு மற்றும் வேம்பு மரத்துக்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு சந்தனம், மஞ்சள், குங்குமம் மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிவன்-பார்வதி திருமணமும், அதனைத் தொடர்ந்து அரசு-வேம்பு திருமணமும் நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயம் தழைக்கவும், பொதுமக்கள் நோயற்ற வாழ்வு பெறவும், திருமண தோஷம் நீங்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டியும் இந்த திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அரச மரம், வேப்ப மரத்திற்கு திருக்கல்யாணம்: வேடசந்தூர் அருகே விநோதம் appeared first on Dinakaran.

Tags : Vinotham ,Vedasandur ,Dinakaran ,
× RELATED வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை