×

ஈரோட்டில் இந்திரா காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

 

ஈரோடு, நவ.20: ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தீபா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா பங்கேற்று, இந்திரா காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ஜவகர் அலி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜூபைகர் அகமது, என்சிடபுள்யு தலைவி கிருஷ்ணவேணி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய்கண்ணா, பாபு என்ற வெங்கடாச்சலம், எஸ்சி பிரிவு ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் இந்திரா காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Indira Gandhi ,Erode ,Thiruchelvam ,Erode Metropolitan District Congress Party ,
× RELATED தேசிய விருது பிரிவுகளில் இந்திரா...