×

அரசு போக்குவரத்து பணிமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

 

மேட்டுப்பாளையம், நவ.20: மேட்டுப்பாளையம் அரசுப்போக்குவரத்து கழக பணிமனையில் பணியாளர்களின் நலனுக்காக திமுக தொழிற்சங்கம் சார்பில் கூடலூர் நகர மன்றத்தலைவர் அறிவரசு ஏற்பாட்டின் பேரில் ரூ.2 லட்சம் மதிப்பில் 4 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இதனை நீலகிரி எம்பி ஆ.ராசா நேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும், பணியாளர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பொது மேலாளர் ஸ்ரீதரன், கிளை மேலாளர்கள் பாஸ்கரன், பாலச்சந்தர், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி, கூடலூர் நகர மன்றத்தலைவர் அறிவரசு, மேட்டுப்பாளையம் நகர செயலாளர்கள் முகமது யூனூஸ், முனுசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி, திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கோவை மண்டல பொதுச்செயலாளர் பெரியசாமி, மண்டல தலைவர் துரை, மண்டல பொருளாளர் கணேசன், கிளைச்செயலாளர் சசி ராஜ், கிளைத்தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post அரசு போக்குவரத்து பணிமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் appeared first on Dinakaran.

Tags : Transport ,Mettupalayam ,Kudalur city council ,DMK union ,Dinakaran ,
× RELATED மது போதையில் பீர் பாட்டிலில் மெக்கானிக்கை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது