×

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

 

சிவகங்கை, நவ.20: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பட எதுவாக சிவங்கை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் 10.11.2023 அன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் drbsvg.rcs@gmail.com என்ற இணைய தளம் வழியாக மட்டுமே 1.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்து தேர்வு 24.12.2023 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும்.

மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல் வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு இணைதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை.மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (drbsvg.rcs.@gmail.com) வெளியிடப்பட்டுள்ளது.

The post காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai District Co- ,operative ,Societies ,Coordinator ,Dinakaran ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...