×

ராமேஸ்வரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன்

ராமேஸ்வரம், நவ.20: ராமேஸ்வரத்தில் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று 6,679 பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் நேற்று ஒன்றிய அரசின் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது. ராமேஸ்வரம் மெய்யம்புளி அருகில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு தொழில்கள் துவங்கிடவும், நடந்து வரும் தொழில் அபிவிருத்திக்காகவும் கடன் வழங்கப்பட்டது.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயனாளிகளுக்கு வங்கியின் செக் வழங்கி கடன் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 6,679 பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டது. இதில் நிநி சேவைகள் துறை செயலாளர் விவேக்ஜோசி, இணைச்செயலாளர் பிரசாந்த் குமார் கோயல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயக்குனர் அஜய்குமார் ஸ்ரீ வத்சவா, செயல் இயக்குனர் சஞ்சய் வினாயக், பொது மேலாளர் மோகன் உட்பட பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர். பெண்கள் உட்பட ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தார்.

The post ராமேஸ்வரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Prime ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...