×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு

 

திருப்பூர், நவ.20: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகராட்சி எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தல் -2024 முன்னிட்டு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் (வடக்கு) திருப்பூர் (தெற்கு) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறை, ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களை பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாநகர துணை காவல் ஆணையர் வனிதா, திருப்பூர் சார் ஆட்சியர் (பொ) ராம்குமார். துணை ஆட்சியர்கள் திவ்ய பிரியதர்ஷனி, தர்மராஜ், குமரேசன், உதவி இயக்குநர் (நிலஅளவை) ஹாரிதாஸ், தனி வட்டாட்சியர் தங்கவேலு மற்றும் அனைத்து வட்டாட்சியர்களும் கலந்துகொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Collector ,Christuraj ,Tiruppur ,Dinakaran ,
× RELATED காங்கயம் பகுதியில் கூட்டு குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணி ஆய்வு