×

திருச்செந்தூர் கோயிலில் நுழைவு கட்டணத்தை குறைக்க கோரிக்கை

 

பல்லடம், நவ.20: திருச்செந்தூர் கோயிலில் அதிகரித்த நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல்லடம் அருகே காரணம்பேட்டையில் பாஜ மாநில துணைத்தலைவர் கனக சபாபதி தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் பாஜ பிரமுகர் கார்த்திகேயன் இல்லத்திற்கு வந்த பாஜ மாநில துணைத்தலைவர் கனக சபாபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் நுழைவு தரிசன கட்டணம் ரூ.100, ரூ.200 ஆக இருந்தது தற்போது ரூ.1000, ரூ.2000 என்று அதிகரித்துள்ளனர்.

கோயிலுக்கு கூட்டம் அதிகம் வந்தால் கட்டணத்தை குறைக்க வேண்டும். பக்தர்கள் நலன் கருதி நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது பழையபடி குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட துணைத்தலைவர் ஜோதிமணி, மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஜெர்மணி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருச்செந்தூர் கோயிலில் நுழைவு கட்டணத்தை குறைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,Palladam ,BJP ,Prasanepet ,
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம்...