×

கண்டமனூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி

 

வருசநாடு, நவ.20: கண்டமனூர் அருகே எட்டப்பராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் சிறு ஓடைகள் உள்ளது. இங்கு மழை காலங்களில் வரக்கூடிய மழை நீர் இந்த ஓடை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லுகிறது. எனவே இந்த ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து புதிய தடுப்பணைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதனை க.மயிலாடும்பாறை ஒன்றியப் பொறியாளர்கள், எட்டப்பராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்திபால்சாமி, அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். விவசாயிகள் கூறுகையில், மழைக்காலங்களில் பெய்து வரும் மழை நீர் இந்த ஓடை வழியாக தனியார் நிலங்களுக்கு செல்கிறது மேலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது.

இதனால் அருகில் உள்ள விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த ஓடையில் தடுப்பணையை கட்டி நீரை தேக்கி வைத்தால் இந்த பகுதியில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது தடுப்பணை கட்டும் பணிகள் நடந்து முடியும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்றனர்.

The post கண்டமனூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kandamanur ,Varusanadu ,Ganesapuram ,Etapparajapuram panchayat ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்