×

பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்

 

சென்னை: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாடுவதில், வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வைணவ ஆழ்வார்களில் ஒருவரான தூப்புல் வேதாந்த தேசிகருக்கு, காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு பகுதியில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரணவ நட்சத்திரத்தை ஒட்டி, வேதாந்த தேசிகர் வரதராஜ பெருமாள் கோயில் அருகே எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருவது பழக்கம்.

அதன் அடிப்படையில் நேற்று, வேதாந்த தேசிகர் சுவாமி விதி உலா வந்தபோது, வரதராஜ பெருமாள் கோயில் அருகே சன்னதி வீதியில் எழுந்தருளிய போது வடகலை, தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர். அப்போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி, வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகர் முன்பு பிரபந்தம் பாட எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தி்ற்கு வந்த விஷ்ணு காஞ்சி போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

தென்கலை பிரிவினர் வரதராஜ பெருமாள் கோயில் அருகில் பிரபந்தம் பாடுவதற்கு மட்டுமே தடை மற்றும் வழக்கு உள்ளதாகவும், வெளி பகுதிகளில் பாடுவதற்கு தடை இல்லை என தென்கலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இருதரப்பினரும், சுவாமி ஊர்வலம் முன்பு பாடுவதற்கு காவல்துறையினரும், இந்து சமய அறநிலைத்துறையிரும் அனுமதி அளித்த பின்பு தேசிகர் சுவாமி வீதி உலா போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது.

The post பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Vadakalai-Southern sect ,Prabandham ,Chennai ,Varadaraja Perumal Temple ,Kanchipuram ,Northern ,North ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...