×

80 ஆயிரம் கிமீ நடந்து இந்திய வம்சாவளி முதியவர் சாதனை

லண்டன்: அயர்லாந்தில் வசித்து வருபவர் வினோத் பஜாஜ்( 73).சென்னையில் பள்ளி படிப்பை முடித்த அவர், கடந்த 1975ல் ஸ்காட்லாந்துக்கு சென்றார். பின்னர் அவர் அயர்லாந்தின் லிமெரிக் நகரில் குடியேறினார். சில ஆண்டுகளுக்கு முன் உடல் எடையை குறைப்பதற்காக தீவிர நடைப்பயிற்சியை மேற்கொண்டார். தினந்தோறும் அதிக அளவு தூரம் நடந்து தனது உடல் எடையைக் குறைத்தார். இதன் மூலம் நடைபயிற்சி மீதான ஆர்வம் அவருக்கு அதிகரித்தது. 2016-ம் ஆண்டு நடைப்பயிற்சியைத் தொடங்கிய வினோத் பஜாஜ், பூமியின் சுற்றளவு தூரமான 40,075 கிலோ மீட்டர் தூரத்தை 1,496 நாட்களில் கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். கடந்த 2020 செப்டம்பரில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இவர் ஆக்ட்டிவிட்டி டிராக்கர் என்ற செயலியை பயன்படுத்தி நடக்கும் ஒவ்வொரு அடியையும் கணக்கிட்டுள்ளார்.

இந்நிலையில், பூமியின் சுற்றளவில் இரு மடங்கு தூரமான 80,000 கிமீ தூரத்துக்கு நடந்து மேலும் ஒரு கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். 1,114 நாட்களில் இந்த தூரத்தை கடந்து தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். நடைபயிற்சியில் இந்த புதிய சாதனை தொடர்பான அவரது விண்ணப்பம் குறித்து கின்னஸ் நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது.

 

The post 80 ஆயிரம் கிமீ நடந்து இந்திய வம்சாவளி முதியவர் சாதனை appeared first on Dinakaran.

Tags : London ,Vinod Bajaj ,Ireland ,Chennai ,Scotland ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை