×

பூசாரிக்கு சயனைடு கொடுத்த அதிமுக கவுன்சிலர்: இன்ஸ்டாகிராம் அழகி கொலை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: பணத்தை கொடுக்காததால்ஆசைக்கு இணங்க மிரட்டல்

சேலம்: இன்ஸ்டாகிராம் அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக கவுன்சிலரிடம் சயனைடு வாங்கிய திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சேடப்பட்டியை சேர்ந்தவர் பசுவராஜ் (38). இவர் கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (28). இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்வி மாயமானார். இதுசம்பந்தமாக பசுவராஜ் கொடுத்த புகாரின்பேரில், தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் அழகி செல்வி, சேலம் இரும்பாலை அருகேயுள்ள பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே முட்புதரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை, பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பூசாரி குமார் (42) என்பவர் சயனைடு கொடுத்து கொலை செய்து, முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து பூசாரி குமாரை கைது செய்து விசாரித்தனர்.

தன்னிடம் குழந்தை பாக்கியத்திற்காக குறி கேட்க வந்த செல்வியிடம் நெருங்கி பழகினேன். அவரிடம் ₹30 ஆயிரம் பணம் கொடுத்திருந்தேன். அந்த பணத்தை தராமல் இருந்தார். 15ம் தேதிகோயிலுக்கு வரவழைத்தேன். பிறகு வீட்டிற்கு அழைத்துச் சென்று பணத்ைத கேட்டேன். அவர் தற்போது இல்லை எனக் கூறினார். அதனால், ஆசைக்கு இணங்க கேட்டபோது வரமறுத்தார். உடனே அவர் அணிந்திருந்த நகையை எடுத்துக் கொள்ள குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தேன். பிறகு 6 பவுன் நகையை எடுத்துக்கொண்டு, உடலை முட்புதரில் போட்டேன். இவ்வாறு பூசாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவத்தில் வேறு காரணம் இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக செல்வியும் பூசாரி குமாரும் குறைந்த விலைக்கு தங்ககாசு வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் லட்சக்கணக்கில் இருவரும் பணத்ைத கொடுத்து வாங்கி வந்துள்ளனர். பெங்களூரில் இருந்து ஐம்பொன் காசுகளாக வாங்கி வந்ததாகவும் அதனை பலருக்கு விற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த தொழிலில் ஏற்பட்ட பிரச்னையில் தீர்த்துக்கட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், சம்பவத்தன்று செல்வி கோயிலுக்கு வந்தபோது, பூசாரியின் நண்பர்கள் சிலர் அங்கிருந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் தான், செல்வியை தனது வீட்டிற்கு பூசாரி குமார் அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு வைத்து தனிமையில் இருக்க முயற்சித்தபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டினாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இதனிடையே சயனைடு கொடுத்து கொன்றிருப்பதால், செல்வியை கொலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டு சயனைடை வாங்கி வைத்திருக்கலாம். எனவே, இந்த கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து சயனைடு எப்படி கிடைத்தது என பூசாரி குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். சம்பவத்திற்கு முந்தைய நாள் பெரும்மாம்பட்டி பகுதியில் வெள்ளி பட்டறை நடத்திவரும் அதிமுக கவுன்சிலர் ஒருவரிடம் இருந்து 1,500 ரூபாய் கொடுத்து சயனைடு வாங்கி வந்துள்ளார். அதிமுக கவுன்சிலரிடம், ‘’கோயில் பகுதியில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. அந்த நாய்களை கொல்ல சயனைடு வேண்டும்’’ எனக் கேட்டு வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே கைதான பூசாரி குமாரை, ஓமலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பூசாரிக்கு சயனைடு கொடுத்த அதிமுக கவுன்சிலர்: இன்ஸ்டாகிராம் அழகி கொலை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: பணத்தை கொடுக்காததால்ஆசைக்கு இணங்க மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Reverend ,Instagram ,Salem ,Supreme ,District ,cyanide ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி