×

உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா! 140 கோடி இந்தியர்கள் உங்களுக்காக வாழ்த்துகிறார்கள். நீங்கள் பிரகாசமாக பிரகாசிக்கவும், நன்றாக விளையாடவும் மற்றும் விளையாட்டுத் திறனை நிலைநிறுத்தவும் வாழ்த்துக்கள். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,World Cup Final ,Delhi ,World Cup ,World Cup Cricket ,Dinakaran ,
× RELATED யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய...