×

தரமான விதைகளை விவசாயிகள் உற்பத்தி செய்வது எப்படி? வேளாண் அறிவியல் நிலையம் பயிற்சி

அருப்புக்கோட்டை, நவ.19: அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மதுரை தேசிய விதை கழகமும் இணைந்து விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் வழிகாட்டுதலின் படி அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையதில் ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தேசிய விதை கழகம் மதுரை விற்பனை அலுவலர் செளந்தர்யா வரவேற்றார். சென்னை தேசிய விதைகழக மண்டல மேலாளர் செல்வேந்திரன், தேசிய விதை கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் தீவன பயிர்களில் தரமான விதை உற்பத்தி பற்றி எடுத்துக்கூறினார். கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பழனிச்சாமி கால்நடை வளர்ப்பு, தீவன சாகுபடி மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்களை பற்றி தெளிவாக விளக்கமளித்தார்.

வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ஷீபா (பயிர் மரபியல்), மானாவாரி பயிர்களுக்கேற்ற அதிக மகசூல் தரும் புதிய ரகங்கள் மற்றும் அதன் சிறப்பு இயல்புகளை பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அறிவியல் நிலைய உதவிபேராசிரியர் வேணுதேவன், விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், விதை சான்றளிப்பு முறைகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் விதை விற்பனையின் போது பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் பற்றி விளக்கமாக கூறினார். வேளாண்மை அறிவியல் நிலைய இணைப்பேராசிரியர் நல்லகுரும்பன், சிறுதானியங்களில் அறுவடை, பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக்கூட்டி விற்பதின் முக்கியத்துவத்தை பற்றி தெளிவுபடுத்தினார். இப்பயிற்சியின் நிறைவாக மதுரை தேசிய விதை கழகம் மேலாளர் ஆதர்ஷ் நன்றி கூறினார். இப்பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

The post தரமான விதைகளை விவசாயிகள் உற்பத்தி செய்வது எப்படி? வேளாண் அறிவியல் நிலையம் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Institute of Agricultural Sciences Training ,Aruppukkottai ,Aruppukkottai Agricultural Science Center ,Madurai National Seed Corporation ,Agricultural Science Center ,Dinakaran ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...