திருச்சி, நவ.19: முகூர்த்த தினத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பூக்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது, இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு திருச்சி காந்தி மார்கெட்டில் பூக்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளது, மேலும் பக்தர்கள் மாலை அணிந்து கோவிலுக்கு செல்வதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது, சராசரியாக பூக்களின் விலை 200 லிருந்து 400 வரை மட்டுமே இருக்கும், ஆனால் மல்லிகை பூ (1கிலோ) நேற்று முன்தினம் ரூ.300 ஆக இருந்தது, ஆனால் நேற்று ரூ.600 ஆகவும், இன்று ரூ.800 ஆக உயர்ந்து உள்ளது.
முல்லை பூ நேற்று ரூ.600 என்பது ரூ.800 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல் ஜாதிப்பூ ரூ.500 ஆகவும், சராசரியாக 300, 400 ரூபாய்க்கு விற்பனை செய்த கனகாம்பரம் நேற்று 700 ரூபாய்க்கு விற்றது ரூ.3000 ஆக உயர்ந்துள்ளது, காக்காட்டான் ரூ.400 ஆக இருந்தது ரூ.900 விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்தி ரூ.150 என்பது ரூ.250, பன்னீா்ரோஜா ரூ.200 டோியா ரூ.200, மஞ்சள் ரோஜா ரூ.150 விற்பனை செய்யப்பட்டது.
The post கார்த்திகை பிறப்பு, முகூர்த்த நாளையொட்டி திருச்சியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு: 700க்கு விற்ற கனகாம்பரம் ரூ.3000 appeared first on Dinakaran.