×

டிசம்பர் 24ம் தேதி இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு

 

கோவை, நவ.19: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட கோவை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10ம் தேதி அன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.drbcbe.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே வரும் டிசம்பர் 1ம் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது. மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளமான www.drbcbe.in வெளியிடப்பட்டுள்ளது.

The post டிசம்பர் 24ம் தேதி இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Govai ,Cooperative Credit Unions ,Societies ,Dinakaran ,
× RELATED தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது...