×

புதர்கள் மண்டிக்கிடக்கும் பள்ளபாளையம் ராஜவாய்க்கால்

 

கரூர், நவ. 19: பள்ளபாளையம் ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அமராவதி ஆற்றின் பிரதான வாய்க்கால் ராஜ வாய்க்கால். ராஜ வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது மழைக்காலம் ஆரம்பித்து கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் மழை இல்லாத போதிலும் சுமாரான அளவில் கரூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.

தற்போது வாய்க்கால் செல்லும் பாதையை தூர்வாரினால் மழைநீர் வரும்பொழுது தடையில்லாமல் செல்ல முடியும். மேலும் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக வாய்க்காலில் சென்று விவசாயத்திற்கு பயன்படும். இதைக் கருத்தில் கொண்டு விரைவில் தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்த வாய்க்கால் கரூர், வெங்கமேடு பிரிவு, எல்.என்.எஸ். பிரிவு, ஈரோடு ரோடு, கார்னர் மற்றும் பஞ்சமாதேவி பகுதிகளில் பெரிய அளவில் தூர்வாராமல் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனை சரி செய்தால் மழை வருவதற்கு முன்பாக தண்ணீர் செல்ல ஏதுவாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயல்படவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதர்கள் மண்டிக்கிடக்கும் பள்ளபாளையம் ராஜவாய்க்கால் appeared first on Dinakaran.

Tags : Pallapalayam Rajavaikal ,Karur ,Amaravati River ,Pallapalayam Rajavaikkal ,
× RELATED கரூர் அமராவதி மேம்பாலத்தில் அசுர...