×

வாக்காளர் பட்டியல் திருத்தமுகாம் விழிப்புணர்வு பேரணி

 

தோகைமலை, நவ.19: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கடவூர் தரகம்பட்டியில் 2024ம் ஆண்டின் தேர்தல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டியில் வருவாய்த்துறை சார்பாக 2024ம் ஆண்டின் தேர்தல் சிறப்பு சுருக்கத்திருத்தம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியை கடவூர் தாசில்தார் முனிராஜ் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

தேர்தல் துணை வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெகமணி, மைலம்பட்டி ஆர்ஐ நெப்போலியன், பாலவிடுதி ஆர்ஐ சிவக்குமார் முன்னிலை வகித்தனர். தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, வையம்பட்டி, மைலம்பட்டி மெயின் ரோடு, தரகம்பட்டி பேருந்து நிலையம், கடைவீதி வழியாக தரகம்பட்டியில் உள்ள கடவூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை மாணவ மாணவியர்கள் பேரணியாக சென்றனர்.

இதில் நாம் செலுத்தக்கூடிய வாக்கே நமது அடையாளம், நமது வாக்கு நமது உரிமை, ஜனநாயகம் காப்பதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும், மனதில் உறுதியாக மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும், பணநாயகம் இல்லாமல் ஜனநாயகத்திற்காக வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதே நமது பெருமையாக கொள்வோம், வாக்காளர் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் விஏஓ ரகு உள்பட மாணவ மாணவியர்கள், நாட்டு நலப்பணி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர் பட்டியல் திருத்தமுகாம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Electoral roll revision awareness rally ,Thokaimalai ,Kadavur Dharagambatti ,Dinakaran ,
× RELATED தோகைமலை ஒன்றியம் கழுகூர், சேப்ளாப்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்