×

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

நாகர்கோவில், நவ.19 : குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினவிழாவின் போது முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 8 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

இவ்விருது குறித்த விபரங்கள் அனைத்தும் (https:awards.tn.gov.in) இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்ட தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும். 20.11.2023 க்கு முன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari District ,Collector ,Sridhar ,Tamil Nadu government ,
× RELATED பூதப்பாண்டி அருகே 55 ஜெலட்டின் குச்சிகள், 22 டெட்டனேட்டர்கள் பறிமுதல்